search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் கோப்பை"

    • பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன.
    • பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 10-ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, மேசைப்பந்து மற்றும் நீச்சல் என 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் முதல் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 என மொத்தம் 1,675 வீரா், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 6 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    • இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கேப்பைக்கான மதுரை மண்டல அளவிலான பூப்பந்து, பளுதூக்குதல் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையா ட்டரங்கத்தில் நாளை(27-ந்தேதி) தொடங்குகிறது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி விளை யாட்டு வீரர்-வீராங்க னைகள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும்.

    பள்ளிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், கல்லூரி களுக்கான போட்டிகள் மார்ச் 1,2 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். பள்ளிகளுக்கான பளு தூக்குதல் போட்டிகள் மார்ச் 11-ந்தேதியும், கல்லூரிகளுக்கான போட்டிகள் மார்ச் 12-ந்தேதியும் நடைபெறும்.பள்ளிகளுக்கான கடற்கரை கையுந்துபந்து போட்டி நாளை மறுநாள்(28-ந்தேதி) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளிலும், கல்லூரி களுக்கான போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடைபெறும்.

    போட்டியில் பங்கேற் பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படும். முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.3ஆயிரமும், 2-ம், 3-ம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1,000 வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பள்ளிகளிலிருந்து பெற்ற சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×