என் மலர்
நீங்கள் தேடியது "ஆண் சிசு"
- சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆண் சிசு உடலை வீசியது யார்? என சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கிறனர்.
- தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.
சிவகாசி
சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் சென்றார்.
அப்போது 250 கிராம் எடை உள்ள குறைமாத ஆண் சிசு உடல் கிடந்தது. இதைக்கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசு உடலை மீட்டு அதனை வீசி சென்ற பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தருமபுரி அருகே ஆண் சிசு திடீர் என்று உயிரிழந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பாக்கியம் (வயது 19) என்பவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தவகோட்டை அடுத்த சுந்தரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று தாய் பாக்கியம் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் இருந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.