search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவைசி"

    • பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் மே மாதம் 13-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ. எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் சமூக ஆர்வலர் மாதவி லதா போட்டியிடுகிறார்.

    அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவருக்கு ஆயுதம் ஏந்திய கமாண்டோக்களின் வி.ஐ.பி பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது.

    பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அவருடன் ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார்.
    • மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான ஒவைசி எம்.பி. போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து அவர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 4-வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

    ஐதராபாத் தொகுதியை கைப்பற்றவும் ஒவைசியை தோல்வியடைய செய்ய பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ஐதராபாத் தொகுதியில் பிரபல நடன கலைஞரான சமூக ஆர்வலர் மாதவி லதா என்பவரை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. முதுகலை பட்டதாரியான மாதவிலதா பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார். மேலும் அவர் பல்வேறு முஸ்லிம் பெண்கள் குழுக்களுடன் தொடர்பில் உள்ளார். அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்காக சிறிய விடுதியையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

    ஒவைசிக்கு இந்த முறை பா.ஜ.க வேட்பாளர் மாதவிலதா கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
    • உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

    ஐதராபாத்:

    அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மாற்று அல்ல. நாட்டை சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. கிட்டத்தட்ட பா.ஜனதா கூட்டணி 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.

    தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும்.

    இந்தியா கூட்டணி என்பது உயரடுக்கு மக்களின் கிளப் ஆக உள்ளது. உண்மையில் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.

    உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சிறையில் வாடுகிறார்கள்.

    இந்தியா கூட்டணிக்கு நாங்கள் செல்லமாட்டோம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்.

    தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்தரி சந்திரசேகரராவ் திறமையானவர். தொலை நோக்கு பார்வை கொண்டார். அவரது அரசியல் சாதுரியத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் ஓவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் பா.ஜனதாவின் பி அணியாக செயல்படுகிறது என்று இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒபாமாவுக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் விமர்சனம்
    • சீனா குறித்து பேசும்போது மோடி, சீனாவின் பெயரை உச்சரிப்பதில்லை

    பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு நேற்று அதிகாலை இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து மோடியிடம் ஜோ பைடன் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், நானாக இருந்தால் மோடியிடம் விவாதித்திருப்பேன் என்றார்.

    இதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளிநாட்டு பயணம் மோடிக்கு சீனாவின் பெயரை உச்சரிக்க தைரியம் கொடுத்திருக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். சீனா இந்திய எல்லயைில் அத்துமீறி நுழைந்தபோது, மோடி சீனா என்ற பெயரை உச்சரிக்காமல் அண்டை நாடு போன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார். இதனை சுட்டிக்காட்டி ஓவைசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாதுதீன் ஓவைசி கூறுகையில் ''மோடியின் அரசு சீனாவுக்கு எதிராக பேசுவதை விட, மணிப்பூர் வன்முறை குறுித்து பேசுவதை விட ஒபாமாவை விமர்சனம் செய்வதில் ஆர்வமாக உள்ளது.

    மோடியின் வெளிநாட்டு பயணம் சீனாவின் பெயரை உச்சரிக்கவும், 8 வாரங்களாக பற்றி எரியும் மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் மவுனம் கலைக்கவும் தையரித்தை கொடுத்திருக்கும் என நம்புவோம்.

    மணிப்பூர் ஆயுத கிடங்கில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ஒருவரை கூட இந்த விசயத்தில் தண்டிக்கவில்லை.

    காஷ்மீர் ஒருபுறம் இருக்கட்டும், எதிர்கட்சி ஆளும் எந்த மாநிலத்திலும் இப்படி நடப்பதையும், நமது ஊடகங்களில் இருந்து வரும் செய்திகளை கற்பனை செய்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக புதிய இந்தியாவிடம் இருந்து (மோடி அரசு).

    இந்திய முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா, ஈரான், எகிப்து முஸ்லிம்களுடன் தொடர்பு இல்லை என்பதை நிர்மலா சீதாராமனுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் இந்திய முஸ்லிம்கள். நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை நம்புகிறோம். இந்திய முஸ்லிம்கள் 1947-ல் இந்தியாவில்தான் இருக்க விரும்பினார்கள். எகிப்து மசூதிக்கு சென்றீர்கள். மோடி அவர்களே, நீங்கள் காஷ்மீர் மசூதிக்கு வாருங்கள். நீங்கள் இந்திய பிரதமர், எகிப்து பிரதமர் இல்லை'' என்றார்.

    • சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார்.
    • காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது.

    மும்பை :

    எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டம் தானே மாவட்டம் மும்ரா பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் ஓவைசி உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என கூறினார். மேலும் அவர் பேசியதாவது:-

    அஜித்பவார், சுப்ரியா சுலே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிசால் தலைவராக முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?. எம்.ஐ.எம். கட்சி 65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது கட்சி கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்வார்கள். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நமது கட்சியினர் உள்ளனர். இந்த வளர்ச்சி தொடர வேண்டும். இளைஞர்கள் நிர்வாகத்திற்குள்ளும் நுழைய முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் மூலமாகவும் நிர்வாகத்துக்குள் செல்ல வேண்டும். இஸ்லாமியர்கள், தலித்துகளுக்காக போராட இளைஞர்கள் எம்.ஐ.எம். கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    நமது மதத்தினருக்கு எதிரான சம்பவங்கள் நடந்த போது உத்தவ் தாக்கரே ஏன் அமைதியாக இருந்தார். சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார். அதற்காக அவருக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் உதவி செய்ய அவர்கள் மறந்துவிடுவர். நமது விதி என, நம்மை அவர்கள் விட்டுவிடுவர். இது என்ன மாதிரியான மதச்சார்பின்மை. காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது. ஆனால் கும்பலால் கொலை செய்யப்படும் நமது மக்களை சந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களின் கோட்டை என நினைப்பவர்களுக்கு எதிராக எம்.ஐ.எம். பலமான வேட்பாளர்களை நிறுத்தும். உங்களால் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது.

    எங்களுக்கு விசுவாசமாக உள்ளவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் உங்களை தோற்கடிப்பேன். பண பலத்தால் எங்களை நீங்கள் வாங்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×