search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்பாலை தொழிலாளர்கள்"

    • நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழி லாளர்களை வேன் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவேனை தென்காசி அருகே உள்ள மலையன்குளத்தைச் சேர்ந்த சங்கர்மணி(வயது 35) என்பவர் ஓட்டி வருகிறார்.

    அவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலா ளர்களை வேனில் அழைத்து சென்றார்.

    அந்த வேன் வன்னி யம்பட்டி-ஆலங்குளம் இடையே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், வேன் மீது மோதியது. அப்போது வேன் டிரைவர் பிரேக் போட்டார். இதில் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி படுகாயம் அடைந்தனர்.

    பலவேசம் என்பவர் மனைவி வேலுத்தாய் (50), மாரீஸ்வரி(39), மணி(55), காளியம்மாள் (40), கலாராணி (32) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலுத்தாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வேன் டிரைவர் சங்கர் மணி, கற்பகராஜ் மற்றும் 8 பெண் தொழிலாளர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×