என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் ஜெயன்ட்ஸ்"

    • மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
    • மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.

    மும்பை:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.

    இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.

    அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முதல் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
    • குஜராத் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயன்ட்ஸ் நிர்வாகம், தங்கள் அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை அறிவித்தது.

    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் 74 ரன்கள் விளாசி ஆட்டநாயகியாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி குஜராத் அணி கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட 29 வயதான பெத் மூனி வெளிநாட்டு லீக் போட்டியில் ஒரு அணியை வழிநடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய ஆல் ரவுண்டர் சினே ராணா துணை கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.

    டபிள்யூ.பி.எல். லீக்கில் 4-ம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது

    • குஜராத் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
    • உ.பி. அணியின் தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 88 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வோல்வார்த் 30 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். உ.பி. வாரியர்ஸ் அணியின் எக்லேஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 4 ரன்னிலும், கிரண் நவ்கிர், சமரி அட்டப்பட்டு ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த தீப்தி சர்மா ஒருபுறம் நிற்க அதன்பின் வந்த கிரேஷ் ஹாரிஸ் 1 ரன்னிலும், ஷ்வேதா ஷெராவத் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்த உ.பி. வாரியர்ஸ் 35 ரன்கள் எடுப்பதற்குள் 5 விககெட்டுகளை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மா உடன் பூனம் கெமர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தீப்தி சர்மா 60 பந்தில் 88 ரன்களும், பூனம் கெமர் 36 பந்தில் 36 ரன்களும் ஆட்டம் இழக்காமல் எடுத்த போதிலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    அந்த அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி, உ.பி. வார்யர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    ஆர்சிபி இன்று மும்பையை எதிர்கொள்கிறது. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நாளை டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று, ஆர்சி இன்று தோல்வியடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் முன்னேறும்.

    இன்று ஆர்சிபி வெற்றி பெற்று, நாளை குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றால் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ ஆகிய இரண்டு அணிகள் ஒன்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியடைந்தால் ஆர்சிபி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    • குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது.
    • குஜராத் அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

    ஐதராபாத்:

    11- வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3- வது இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், 2-வது போட்டியில் 35-30 என்ற கணக்கில் புனேயையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 40-42 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவிடம் தோற்றது. 4-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுடன் 30-30 என்ற கணக்கில் டை செய்தது.

    தமிழ் தலைவாஸ் 5- வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்சை இன்று இரவு 8 மணிக்கு எதிர் கொள்கிறது. குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது.

    குஜராத் அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் உ.பி-யோதாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    உ.பி. அணி 16 புள்ளியு டன் (3 வெற்றி, 1 தோல்வி) 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அரியானா 10 புள்ளியுடன் (2 வெற்றி, 1 தோல்வி) 8-வது இடத்தில் இருக்கிறது. 3-வது வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.

    நடப்பு சாம்பியனான புனேரி பல்தான் 19 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.

    • தலைவாஸ் அணியில் நரேந்தர் 15 புள்ளிகள் திரட்டினார்.
    • குஜராத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

    ஐதராபாத்

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே அற்புதமாக செயல்பட்ட தலைவாஸ் அணி முதல் பாதியில் 18-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

    பிற்பாதியில் 2 முறை எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்திய தமிழ் தலைவாஸ் அணி முடிவில் 44-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது. அதிகபட்சமாக தலைவாஸ் அணியில் நரேந்தர் 15 புள்ளிகள் திரட்டினார். குஜராத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

    தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற பெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 30-28 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.



    • 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
    • முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
    • இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.

    இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.


    இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. 

    • குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
    • ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூன் -லாரா வால்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா வால்வார்ட் 6 ரன்னிலும் அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டியாண்ட்ரா டாட்டின் 25, சிம்ரன் ஷேக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தது. ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர்.
    • மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும் அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர். அவர்களை தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும் அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்டஸ் அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா 33 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் டாட்டின், தனுஜா கன்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷிக் கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். லிட்ச்பீல்ட் 30 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனாலும், நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    • குஜராத் அணியின் மூனி 96 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    லக்னோ:

    5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தியோல் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூனி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. அமன்ஜோத் கவுர் 27 ரன்களிலும், சஜீவன் சஜனா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.

    ×