என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய ஊழியர் சாவு"

    • டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி நடைபெற்றது.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

    கோபி:

    நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதி கோரக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59). இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் சண்முகம் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிாிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×