search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச மெசேஜ்"

    • தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆலிசாவுக்கு ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
    • முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.

    பாஜகவின் திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருப்பவர் ஆலிசா அப்துல்லா.

    இவர், தனக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நபரை அவர் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அழைத்து வந்து போலீசிடம் ஒப்படைத்து அதிரடி காட்டியுள்ளார்.

    சென்னை நீலாங்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் இருந்த அந்த நபர், அலிசாவிடம் தன்னுடன் படுக்கவும், தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆலிசா, அந்த நபர் தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று, கையும் களவுமாக பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

    இதற்கிடையே, இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆலீசா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.

    மேலும், பெரிய கட்சியில் பதவியில் உள்ள தன்னை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களுக்கு என்ன நிலைமை எனவும் ஆலிசா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 38 வயது இளம்பெண் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    கோவை,

    கோவை புலியகுளம் ஈஸ்வரன் லே-அவுட்டை சேர்ந்தவர் 38 வயது இளம்பெண். இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

    நான் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் எனது நிறுவனத்தில் காசாளராக எஸ்.எம்.பாளையத்தை சேர்ந்த பார்த்தசாரதி (வயது55) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது உனக்கு சம்பளத்தில் ரூ.3 ஆயிரம் உயர்த்தி தருகிறேன். அதற்கு நீ எனது ஆசைக்கு இணங்குமாறு என்னை அழைத்தார். நான் வர மறுத்து செல்போன் இணைப்பை துண்டித்தேன்.

    ஆனால் அவர் விடாமல் மீண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு சினிமாவுக்கு செல்லலாம் வா என என்னை அழைத்தார். அப்போதும் நான் வர மறுத்து விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசாளர் பார்த்தசாரதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    ×