search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி ரோஜா பூங்கா"

    • தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கத்துறை சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    2006-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கி உலக ரோஜா சங்க சம்மேளனம் சிறப்பித்துள்ளது.

    தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ்கிறது.

    இந்த ஆண்டு கோடை பருவகாலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இதையொட்டி ரோஜா செடிகளின் கவாத்து பணியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை சீசனை வரவேற்கும் விதமாக தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன.
    • சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம்பெறுவது வழக்கம்.

    சீசனுக்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டன. அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    செடிகளுக்கு இயற்கையாக உரம் இடுவது, களை எடுப்பது, நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது என பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கோடை சீசனை வரவேற்கும் விதமாக தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை நடைபாதையில் நடந்து சென்றபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    இதுகுறித்து பூங்கா நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஒவ்வொர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி கடந்த மாதம் கலெக்டர் முன்னிலையில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒருபுறம் அப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக தற்போது பூக்கும் வகையில் 1-வது மற்றும் 5-வது அடுக்கில் மட்டும் நவம்பர் மாதத்திலேயே கவாத்து செய்யப்பட்டு விட்டது.

    இதனால் தற்போது அந்த இரண்டு அடுக்குகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தொடர்ச்சியாக கோடை சீசனுக்கும் பூத்து குலுங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் நாட்டிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதினை கடந்த 2006-ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு உலக ரோஜா சம்மேளனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×