என் மலர்
நீங்கள் தேடியது "விசாரளை"
- காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர்.
- பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த 2 காளைகள் திடீரென போட்டி நடைபெறும் இடத்தை விட்டு வெளியே ஓடியது. வேகமாக ஓடிய காளைகள் திருச்சி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.
காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர். அப்போது ஒரு காளை மாடு பாலத்தின் வழியாக ஓடிய போது தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காளையின் உரிமையாளர் அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது.
ஜல்லிக்கட்டில் காளை ஒன்று உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.