search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சி.சீனிவாசன் பேச்சு"

    • திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மணிக்கூ ண்டில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகிய 3 பேரும் சேர்ந்து திருமங்கலம் பார்முலாவை தேர்தலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினர். தற்போது அதைவிட பல மடங்கு தில்லுமுல்லு செய்து ஈேராடு கிழக்கு தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் ஆடு மாடுகளைப்போல அடைத்து வைத்து புதிய பார்முலாவை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தி உள்ளனர். பழைய தில்லுமுல்லு பார்முலாவை தி.மு.க.வே முறியடித்துள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தில்லுமுல்லு செய்கின்றனர்.

    வார்டுக்கு 2 அமைச்சர்கள் வீதம் செயல்பட்டு வாட்ச் முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள், தினசரி ரூ.1000 என கூலி நிர்ணயித்து வாக்கா ளர்களை விலைக்கு வாங்கி தேர்தல் விதிமுறை களை காற்றில் பறக்க விட்டனர். ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை தி.மு.க. செலவழித்துள்ளது.

    238 பூத்துகள் உள்ள இடத்தில் 450 இடங்களில் முகாமிட்டு இவர்களின் தேர்தல் விதிமீறலில் கைவண்ணம் காட்டி உள்ளனர். தேர்தலில் சர்வாதிகார சூழ்நிலைக ளை உருவாக்கி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது 22 இடைத்தேர்தல்களில் 3 தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று சூழுரைத்த தி.மு.க.வினர் சூழ்ச்சியை முறியடித்து நமக்கு வா க்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலினை தனது ராஜதத்திரத்தால் எடப்பாடி பழனிசாமி வென்று விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

    ×