என் மலர்
நீங்கள் தேடியது "கவிழ்ந்து 5 பேர் காயம்"
- நேற்று சரக்கு வேன் ஒன்றில் பணியாளர்கள் கற்களை எடுத்து சென்றனர்.
- டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, வேன் பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத் துள்ள பர்கூர் மலைப்பகுதி தேவர்மலை என்ற கிராமத்தில் செந்தில் என்பவரின் நிலத்தை சுற்றி வேலி கற்களை அமைப்பதற்காக நேற்று சரக்கு வேன் ஒன்றில் பணியாளர்கள் கற்களை எடுத்து சென்றனர்.
பர்கூர் மலைப்பகுதி, கடைஈரெட்டி என்ற மலைகிராமம் அருகே சரக்கு வேன் மேடு ஏறும்போது டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, வேன் பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அந்தியூர் அருகே உள்ள கரட்டூர் பகுதியைச் சேர்ந்த குமார் (46), ஜோசப் (42), மாரிமுத்து (40) ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
வாகனத்தை ஒட்டிச் சென்ற முருகன் (42) மற் றும் உடன் சென்ற சண்முகம் (60) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக 5 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.