என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ ஸ்டாண்டு"

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் பரபரப்பு புகார்
    • 120 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    இதில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே அண்ணா ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தோம். இதில் 120 டிரைவர்கள் ஆட்டோ ஒட்டி வருகிறோம்.

    தொழிற்சங்க விதிமுறைகளை மீறி எங்களின் ஆட்டோ ஸ்டாண்டு அருகே இன்னொரு ஸ்டாண்டு வைத்தனர்.

    மேலும் சிலருடன் கூட்டு வைத்துக்கொண்டு புதிதாக போர்டு வைத்து ஆட்டோ ஸ்டாண்ட் உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் எங்கள் 120 ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாராதரம் பாதிக்கும்.

    அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். புதியதாக ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் அளித்த மனுவில் எனது கணவர் கடந்த 2018 -ம் ஆண்டு இறந்து விட்டார். எனவே நலிந்தோர் நிதி உதவி பிரிவின் கீழ் அரசு உதவி பெற விண்ணப்பித்தேன். இதுவரை நிதி உதவி வரவில்லை.

    ஆனால் தாலுகா அலுவலகத்தில் கேட்டால் நீங்கள் நிதி உதவி பெற்று விட்டீர்கள் என்று கூறுகின்றனர். வங்கி கணக்கிலும் பணம் எதுவும் வரவில்லை. எனவே என்னுடைய நலிந்தோர் உதவி தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    ×