search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில் உள்ள"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.79 அடியாக உள்ளது.
    • இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.72 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்க ளாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. மேலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.79 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 638 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் 700 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.72 அடியாக உள்ளது. 30.84 அடி உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.90 அடியாக உள்ளது.

    33.46 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.19 அடியாக உள்ளது.

    ×