என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் சுத்திகரிப்பு"
- புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை பார்வையிட்டார்
- தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாததையடுத்து புதிய குடிநீர் திட்டமான புத்தன் அணை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
தற்பொழுது அந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை ஒரு சில இடங்களில் இருந்து வரு கிறது. இதை சமாளிக்கும் வகையில் லாரிகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகர் கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலை யத்தில் நடைபெற்று வரும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அங்கு கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-
நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்காக புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பணிகள் முடிவடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் உடைப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யும் பணி நடை பெற்று வருகிறது. வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மின் இணைப்பு கள் கொடுக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் நகர பகுதியில் 23 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 4 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப் பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மோட்டார்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் பொதுமக்களுக்கு புத்தன் அணையிலிருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். புத்தன் அணை திட்டம் முழுமைபெறும் போது நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் மேரி ஜெனட்விஜிலா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தோரத்தெருவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் இதனை சீர்செய்யாமல் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த 3ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளதாகவும் எந்திரப்பழுதை சரிசெய்து குடிநீர் வழங்குமாறு பலமுறை அப்பகுதியினர் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.
பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாகவும் தற்போது கோடைகாலம் தொடங்கவுள்ள சூழலில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்