என் மலர்
நீங்கள் தேடியது "மின் நூலகம்"
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மின் நூலகத்தை பயன்படுத்தும் முறை குறித்த நிகழ்ச்சி நடந்தது.
- சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை மின் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் முறை பற்றிய விரிவுரையை ஏற்பாடு செய்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார். அவர் பேசுைகயில், மின் நூலகத்தின் நன்மைகளையும், அதைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இணைய நூலகத்தில் உள்ள புத்தகங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யும் முறை? அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார். இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப்பேராசிரியை சூர்யா நன்றி கூறினார்.
உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.