search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளுக்கடை மேடு"

    • பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி (மாசி 9) பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும், 6-ந் தேதி அக்னி கபாலமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பிரதீப் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து கங்கணம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 4 நாட்களாக வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து இரவு பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலமும், நாளை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் செய்திருந்தார்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×