என் மலர்
நீங்கள் தேடியது "Couch Bag பிளாஸ்டிக்கின் தீமைகள்"
- மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மரக்கன்று நடுதல் மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
- பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மரக்கன்று நடுதல் மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் மகளிர் கலந்து கொண்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் தலைமை ஆசிரியை செல்லம்மாள், பள்ளியின் தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.