என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க புதையல்"

    • பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
    • புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது54). இவர் ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கனியூரை சேர்ந்த சசிகுமார் (61), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), உடுமலைப்பேட்டை நக்கீரர் தெருவை சேர்ந்த சசிகுமார் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பிரபாகர் (37), சேலம் குகை முங்கபாடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (45), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டை சேர்ந்த நடராஜன் (48), சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த முத்து குமாரவேல் (48), விஜயவாடா கொத்தப்பேட்டை சையத்குலாம் தெருவை சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) மற்றும் அவர்களுடன் சில பெண்கள் உள்ளிட்டோரை ஓசூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார்.

    இந்த பூஜைகள் குறித்து லட்சுமி காந்த், சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த கிஷோருக்கு கூறியுள்ளார். கிஷோர் மூலம் பூஜைகள் குறித்து அவரது சகோதரரான குள்ளப்பாவிற்கும் குள்ளப்பாவின் மனைவி ராதாம்மாவிற்கும் (46) தெரியவந்தது.

    சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர்கள் கோவிலில் பூஜைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பல்வேறு பூஜைகளை செய்து புதையல் எடுத்து தருவதாக குள்ளப்பா மற்றும் அவரது மனைவி ராதாம்மா ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் சிறியதாக புதையல் பூஜை ஒன்றை நடத்தியவர்கள். இந்த புதையல் பூஜையில் ஒரு பானையில் சிறிய அளவில் தங்க காசுகள் கிடைத்ததாக ராதாம்மாவையும் அவரது கணவர் குள்ளப்பாவையும் அனைவரும் நம்ப வைத்துள்ளனர். தங்க காசுகளை கணவன், மனைவி இருவரும் கடைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்து உண்மை என நம்பினர்.

    அதனை தொடர்ந்து அந்த கும்பல் ராதாம்மா மற்றும் குள்ளப்பா ஆகியோரிடம் இந்த பகுதியில் பெரிய அளவில் புதையல் ஒன்று உள்ளது. அதனை பல்வேறு தீய சக்திகள் தடுத்து வருகின்றன.

    பெரிய அளவில் பணம் கொடுத்தால் அந்த சக்திகளை விரட்டி புதையலை எடுக்கலாம். அதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கான செலவுக்காக ரூ.8 லட்சம் அளவில் பணம் வாங்கியுள்ளனர்.

    பூஜைகளை செய்த அவர்கள் ஒரு பானையில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதாக கூறி அதனை பத்திரமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பானையை கொடுத்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட ராதாம்மா தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பானையை பூஜை செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது, புதையலை வாங்குவதற்கு ஒரு கும்பல் வந்தனர்.

    அவர்களிடம் ரூ.2½ கோடி பணம் அட்வான்ஸ் வாங்கி ராதாம்மாவிடம் கொடுத்து புதையல் பானை அருகே வைத்துள்ளனர். இரண்டையும் ஒரே நேரத்தில் தான் திறக்க வேண்டும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். புதையல் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த ராதாம்மா, குள்ளப்பா தம்பதியினரிடம் பூஜை நடத்துபவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர்.

    இதனிடையே ராதாம்மாவின் மகனுக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படவே வீட்டிலிருந்த பானை மற்றும் ரூ.2½ கோடி பணம் இருந்த பெட்டியை அவர் உடைத்துப் பார்த்தார்.

    அப்போது இரண்டிலும் பழைய காகிதங்கள் தான் இருந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் உணர்ந்தனர்.

    அதே நேரத்தில், பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.

    வாடகை பணத்தை அவர்கள் கொடுக்காததால் அவர்கள் பேசுவதில் பல்வேறு புதையல் சார்ந்த விஷயங்கள் இருப்பதை அறிந்த அவர், 100 எண் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கவனத்திற்கு தகவல்சென்றது. அவரது உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் அந்த கும்பல் தங்கி இருந்த விடுதியில் சுற்றி வளைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    இந்த புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயதில் இருந்தே வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர் நான் இந்த துறையிலேயே தொடர்ந்து ஈடுபட்டேன்.
    • கடந்த 2021-ம் ஆண்டு வடக்கு நகரமான ஹூக்வூடில் மெட்டல் பகுதியில் புதையல் இருக்கலாம் என தோன்றியது.

    நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹூக்வுட் பகுதியில் இருந்து 1000 ஆண்டு பழமையான தங்க புதையலை கண்டுபிடித்தார். இதனை டச்சு தேசிய தொல்பொருள் ஆய்வகம் தெரிவித்து உள்ளது.

    அந்த புதையலில் 4 தங்க காது பதக்கங்கள், 2 தங்க இலைகள், 39 வெள்ளி நாணயங்கள் என ஏராளமான பொருள்கள் இருந்தன. இதுபற்றி லோரென்சோ ருய்டர் கூறும்போது, 10 வயதில் இருந்தே வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர் நான் இந்த துறையிலேயே தொடர்ந்து ஈடுபட்டேன்.

    அப்போதுதான் கடந்த 2021-ம் ஆண்டு வடக்கு நகரமான ஹூக்வூடில் மெட்டல் பகுதியில் புதையல் இருக்கலாம் என தோன்றியது. அந்த நிலத்தை டிராக்டர் கொண்டு தோண்டினேன்.

    அங்கு பழமையான கலை பொருட்கள் கிடைத்தன. அவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கருதுகிறேன், என்றார். நெதர்லாந்து நாட்டில் தற்போது தான் இதுபோன்ற தங்க நகைகள் கிடைத்துள்ளன என்று அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரிய வரும்.

    கொலம்பியா:

    கொலம்பியா கடற்படைக்கு சொந்தமான சான் ஜோஸ் என்ற கப்பல் கடந்த 1,708-ம் ஆண்டு இங்கிலாந்து படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது. கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 அடிக்கு கீழே ஆழ் கடலில் மூழ்கி கிடக்கும் இந்த கப்பலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலில் 200 டன் எடையுள்ள மரகதலிங்கம், வெள்ளி மற்றும் 11 பில்லியன் ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.91.51 ஆயிரம் கோடி) தங்க நாணயங்கள் அடங்கிய பெரிய அளவிலான புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் பாகத்தில் இருந்து சில தங்க நாணயங்கள், ஜாடிகள், குவளைகள் சிக்கியது. மூழ்கி கிடக்கும் கப்பலில் இன்னும் இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ( 20 பில்லியன்) மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்த கப்பலை 2026-ம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரிய வரும்.

    • தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
    • குடத்திற்குள் 17 முத்து மணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன.

    கொச்சி:

    கேரள மாநிலம் கண்ணூர் அருகே செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர். தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை பார்த்தனர். அதை தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர். இருப்பினும் அது வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோன தொழிலாளர்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவில்லை.

    இதுகுறித்து கண்ணூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து குடத்தை சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் குடத்தை திறந்து பார்த்தபோது, அதற்குள் புதையல் இருப்பது கண்டறியப்பட்டது.

    குடத்திற்குள் 17 முத்து மணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் புதையல் பொருட்களை நேரில் பார்வையிட திரண்டனர். இதையடுத்து போலீசார் அந்த பொருட்களை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தளிப்பரம்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. தகவல் அறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×