search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருளை"

    • ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் கையில் கட்டை பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (49) என்பது தெரிய வந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 919 கிராம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

    இதேப்போல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆசனூர் அரேப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு நபர் கையில் பச்சை கலர் கட்டை பையுடன் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கோவை மாவட்டம் மோப்பெரிபாளையம், தோட்ட சாலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர மணியம் (46) என்பது தெரியவந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ், புகை யிலை பொருட்கள் பான் மசாலா இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர். 

    ×