என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் கிரிக்கெட் லீக் போட்டி"
- இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
- அலிசா ஹீலி 58 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து அலிசா ஹீலி, தேவிகா வைத்யா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இதில் வைத்யா 6 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய கிரண் நவ்கிரே 17 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தஹ்லியா மெக்ராத், அலிசா ஹீலியுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த நிலையில் அலிசா ஹீலி 58 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதையடுத்து சிம்ரன் ஷேக், சோபி எக்லெஸ்டோன் ஜோடி சேர்ந்தனர். இதில் சோபி எக்லெஸ்டோன் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.