என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜமாத் தலைவர்"

    • சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு.
    • விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி.

    த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகில இந்திய முஸ்லீம் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது ஜமாத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்,

    தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

    விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி. அவரது பின்னணி, கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாமியத்திற்கு எதிரானவை.

    இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருப்பதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி குற்றம்சாட்டியுள்ளார்.

    • ஜமாத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்பு வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொண்டி வடக்கு தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஜமாத் மக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை வக்பு வாரியத்துக்கு அனுப்பி யுள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து வக்பு வாரியம் வருகிற 23-ந்தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    ×