என் மலர்
நீங்கள் தேடியது "Women’s Day Festival"
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
- ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி, உள் புகார்கள் குழு, மாணவர்கள் ஆலோசனைக் குழு மற்றும் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தியது. விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ரூபாதேவி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கை அடைவதற்கு தடைகளாக இருப்பவை அதிகம். ஆனால் எதுவுமே தடைகள் இல்லை என்பதை உணர வேண்டும். எண்ணம் இருந்தால் சாதிக்கலாம். இலக்கை கைவிடக்கூடாது. தயக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயம் என்பதே இருக்கக் கூடாது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.