என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண் அள்ளி விற்பனை"
- இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது.
- சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
காகாபாளையம்:
சேலம் அருகே இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பா–ளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் இடங்கண சாலை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ரும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து சாத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சின்னம்பட்டி பிரதான சாலையில் உள்ள இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அங்கு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.