என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மிரட்டல் வீடியோ"
- சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
- வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட மோதலில் குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்த கோகுல் என்பவரை கோர்ட்டு அருகே குரங்கு ஸ்ரீராம் கூட்டாளிகள் கொலை செய்தனர்.
இதனை தொடர்ந்து மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். இதில் ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் யாராவது வீடியோ வெளியிட்டு உள்ளனரா என கண்காணித்து வந்தனர். அப்போது புலியகுளத்தை சேர்ந்த தருண் என்ற இன்பிரண்ட்ராஜ் என்பவர் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கும் பதிவாகி உள்ளது தெரிய வந்தது.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட தருண் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள், அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் பொறுப்பற்றவகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொண்டு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர். மேற்படி ஆயுதங்களை காட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை காண்பித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். யாராவது தேவையற்ற வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, சுய விளம்பரத்திற்காகவோ அல்லது போட்டிக்காகவோ கைகளில் ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
- வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை:
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சத்திய பாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோவை கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.
முன் பகை காரணமாக இந்த 2 கொலை சம்பவங்களும் அரங்கேறியது விசாரணையில் தெரியவந்தது. தொடர் கொலைகளை அடுத்து கோவை மாநகரில் உள்ள ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இதுவரை சுமார் 56-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் "பிரண்ட்ஸ் கால் மி தமன்னா" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்குமாறும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.
அதில் "எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்" என்ற வன்முறையை தூண்டும் பாடல் வரிகளுடன் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.
மேலும் கோர்ட்டு அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த பெண் பின் தொடர்ந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா என்பதும், இவர் ஏற்கனவே கோவையில் கஞ்சா வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.
கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் திருப்பூர், விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டு வினோதினி என்ற தமன்னாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடி வரும் நிலையிலும் கூட தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், தான் ஆயுதங்களுடன் இருப்பது போன்று வரும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அப்போது டிரெண்டிகிற்காக செய்யப்பட்டது தான் இந்த வீடியோக்கள். தற்போது நான் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. நான் 6 மாத கர்ப்பிணியாக, எனது கணவருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து தனிப்படையினர் அவரை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்றிரவு சேலம் சங்ககிரி விரைந்தனர்.
பின்னர் அங்கிருந்த தமன்னாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்