என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசியில்"
- பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளதாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
நடப்பு நிதியாண்டில் டாப்செட்கோ கழகம் மூலம் தனிநபர் கடன், கறவை மாட்டு கடன், ஆழ்துளைக் கிணறு அமைக்க கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளை எய்துவது குறித்து டாப்செட்கோ தலைவர் அறிவுரைகள் வழங்கினார்.
கூட்டத்தில் டாப்செட்கோ தலைவர் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமணக்குமார் மற்றும் துணைப்பதிவாளர் கார்த்திக் கவுதம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர், திட்ட மேலாளர் ராமச்சந்திரன், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வானதி மற்றும் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.