என் மலர்
நீங்கள் தேடியது "Garbage கடற்கரை"
- கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது.
- மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கடற்கரை துறைமுகமாக மாறிக்கொண்டு வருகிற இந்நிலையில் அதற்கான வேலைகளும் கட்டிட வசதிகளும் சென்ற ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலமான மனோரா செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு திண்பண்டங்களின் குப்பைகளை அங்கு விட்டுச்சென்றனர்.
மேலும் கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. கடல்பாசிகளும், நெகிழி பொருட்களும், இதர தேவையற்ற பொருட்களும் கடற்கரையை சூழ்ந்து காணப்படுவதால் கடற்பகுதி மிகவும் அசுத்த நிலையில் காட்சியளித்தது.
இதை அறிந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மற்றும் நேரு யுகேந்திரா மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் இணைந்து மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.