என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "வணிகர் தின மாநாடு"
- ‘வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
- அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் தலைமையில் பெரம்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பொது செயலாளர் ராகவேந்திரா மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இமானுவேல் ஜெயசீலன், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.அந்தோணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வருகின்ற மே 5-ந்தேதி வணிகர் தின மாநாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு 'வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு பின்னர் எனது தலைமையில் செயல்படும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து முதன் முதலாக என்னுடைய தலைமையில் நடத்த இருக்கும் முதல் மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
- வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது.
- தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 40-வது வணிகர் தின மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதுதொடர்பாக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம், மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில், சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதி லிங்கம் முன்னிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஓட்டல் ஜெய்டூணில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 7 மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர், மாநில இணைச் செயலாளர், பழைய பொருள் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.