search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏக்நாத் கட்சே"

    • தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தபின் பா.ஜனதாவில் இணை இருக்கிறார்.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவில் முக்கிய தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. முன்னாள் மந்திரியான இவர் பா.ஜனதாவில் சில நாட்களில் இணைய உள்ளார்.

    கடந்த சில நாட்களாக பா.ஜனதா தலைமையுடன் ஏக்நாத் கட்சே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன்பின் அவர் சரத்பவார் அணியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளார். இது சரத்பவாருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு பா.ஜனாாவில் இணைய இருக்கிறார்.

    • ரக்‌ஷா கட்சேவும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனா்.
    • 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேவுக்கும் அவரது மருமகளும் பாஜக மக்களவை எம்.பியுமான ரக்ஷா கட்சேவுக்கும் ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேவும் அவரது மருமகளும் பா.ஜ.க. எம்.பி.யுமான ரக்ஷாகட்சேவும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனா். அதில் 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே ரூ.137.14 கோடி அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

    ஏக்நாத் கட்சே கடந்த 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே.
    • இவர் பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை மந்திரியாக இருந்தபோது நில பேரம் தொடர்பான மோசடி வழக்கில் சிக்கினார். இதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    இந்தநிலையில் மேல்-சபையில் பேசிய ஏக்நாத் கட்சே, பா.ஜனதா கட்சி மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவை மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா பணம் படைத்த பெரிய மனிதர்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்தவர் கோபிநாத் முண்டே. ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் பா.ஜனதா அவரை மறந்துவிட்டதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படுவதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோபிநாத் முண்டே எனது ஆட்சேபனையை நிராகரித்தார்.

    பா.ஜனதாவின் வளர்ச்சியில் கோபிநாத் முண்டேவின் பெரும் பங்களிப்பு இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தையும் இப்போது மறந்துவிட்டார்கள். முண்டேவின் குடும்பமும், நானும் சில காலம் கட்சியில் அறிவிக்கப்படாத புறக்கணிப்பை எதிர்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோது ஏக்நாத் கட்சே முதல்-மந்திரி போட்டியில் இருந்தார். ஆனால் கட்சி அவருக்கு பதிலாக தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×