search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடப்புத்தகங்க"

    • சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



    அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. 

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அச்சகத் தொழிலில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இங்கு தான் அச்சிடப்படுகிறது. சிவகாசியில் செயல்பட்டு வரும் அச்சகங்களில் லட்சக்கணக்கான பணியா ளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்த கங்கள் சிவகாசி அச்சகங்க ளில் தயாராவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தக மாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டிற்கு தேவை யான பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு, அச்சகங்களுக்கு டெண்டர் மூலம் அச்சிடும் பணிகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாட புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்தபணிகள் தமிழகத்திற்கு 85 சதவீதம் வழங்கப்பட்டாலும் 15 சதவீத பணிகளை ஆந்திர மாநிலதிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 100 சதவீத பணிகளையும் தமிழகத்திற்கே வழங்கி தமிழக அச்சக தொழிலில் ஈடுபடுவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×