என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பச்சை பயிறு"
- விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2022-23-ம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கில் மத்தியஅரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நடப்பு ஆண்டு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 3,110 டன் உளுந்தும், 820 டன் பச்சைப்பயறும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல்பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.66 வீதமும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.77.55 வீதமும் வழங்கப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைப்பயறை விற்பனை செய்து பயன் அடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்