search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்"

    • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
    • ரஷியா அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

    தி ஹேக்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

    போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் வசித்து வரும் இலக்குகளைத் தாக்கியதற்காக ரஷியாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மற்றும் அதன் ராணுவ தளபதி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    அதன்படி, முன்னாள் பாதுகாப்பு மந்திரி செர்கே ஷோய்கு மற்றும் தலைமை தளபதி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

    உக்ரைன் நாட்டு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    • 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

     

     

    இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ளது
    • மின்சார கிரிட்-களை நாசமாக்கிய குற்றத்திற்காக "கைது வாரண்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரிட்டு வருகிறது.

    இப்பின்னணியில், பல்வேறு போர் குற்றங்கள் புரிந்ததாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் (Hague) நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) வழக்கு நடைபெற்றது.

    இந்நிலையில், ரஷிய நீண்ட தூர ராணுவ விமான சேவையின் தலைவரான செர்ஜி கொபிலாஷ் (Sergei Kobylash) மற்றும் கருங்கடல் படை (Black Sea Fleet) ஆணையர் விக்டர் சொகோலோவ் (Viktor Sokolov) ஆகிய இருவரும் 2022 அக்டோபர் தொடங்கி 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பல மின்சார உற்பத்தி கிரிட்-களை முற்றிலும் நாசமாக்கிய குற்றத்திற்காக ஐசிசி (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    மின் கட்டமைப்பை நேரில் கண்டறிய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) உக்ரைனுக்கு சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) ரஷியா உறுப்பினர் இல்லை.

    எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் வசம் ரஷியா ஒப்படைக்காது என தெரிகிறது.


    இந்த தீர்ப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) வரவேற்றுள்ளார்.

    கடந்த வருடம், ஐசிசி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் வேறொரு அதிகாரி ஆகியோர், உக்ரைனிலிருந்து அந்நாட்டு சிறுவர்களை ரஷியாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தி "வாரண்ட்" பிறப்பித்தது.

    ஆனால், இதனை புறக்கணித்த ரஷியா, பதிலடியாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிஞருக்கும் "வாரண்ட்" பிறப்பித்தது.

    நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா.வின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வேறு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்தது.
    • ரஷிய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது.
    • ரஷியா அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

    போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிபர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    ×