என் மலர்
நீங்கள் தேடியது "சருகுகள்"
- திருமங்கலம் அருகே சாலையோர சருகுகளில் ஏற்பட்ட தீ குடியிருப்பு பகுதியில் பரவியது.
- இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம்
திருமங்கலம் - மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தரிசு நிலங்கள் உள்ளன.
தரிசு நிலத்தில் கிடந்த காய்ந்த சருகுகளில் நேற்று இரவு திடீரென்று தீப் பிடித்தது. மளமளவென பரவிய தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதி வரை பரவியது. இதனால் பொது மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் ஆர்.ஐ. அருண், வடகரை வி.ஏ.ஓ.ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.