search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்கார பொருட்கள்"

    • சுற்றுலாபயணிகள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • நீலகிரி மாவட்டத்தில் 4-ல் 3 பங்கு வனப்பகுதிகளை உடையது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 4-ல் 3 பங்கு வனப்பகுதிகளை உடையது. இயற்கை வளம் செறிந்த மாவட்டம் என்பதால் இங்கு உள்ள பெருபாலான இடங்களில் பல்வேறு அரிய வகை மரங்கள் மற்றும் செடி,கொடிகள் தழைத்து வளர்ந்து அழகாக காட்சியளித்து வருகின்றன.

    ஊட்டியில் எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், நீர் நிலைகள், சோலைக் காடுகள், புல்வெளிகள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்து பகுதிகளும் பச்சைப் பசேலென காண்போரை கவர்ந்திழுக்கும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டியில் பைன் மரங்களை அதிகம் பார்க்க முடியும். இது அடர் பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளுடன் உயரமாக வளர்ந்து நிற்கும். ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேவதாரு என்று அழைக்கப்படும் பைன் மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக உள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுவ தால், சுற்றுவட்டாரப் பகுதி களில் அதிகமாக நடவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போ னால் ஊட்டி-கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் என்ற பெயரில் சுற்றுலாத் தலமே உள்ளது.

    பைன் மரங்களில் இருந்து கீழே விழும் காய்கள் அழகாக காட்சி அளிக்கும். எனவே இதனை அங்கு வசிக்கும் உள்ளூர்வா சிகள் சேகரித்து, அழகிய அலங்கார பொருட்களாக மாற்றி வியாபாரம் செய்து வருகினறனர்.

    அப்போது அவர்கள் பைன் மர காய்களுக்கு அழகான வடிவம் கொடுத்து மட்டுமின்றி பல்வேறு வர்ணங்கள் பூசி தத்ரூபமாக அலங்கார பொருட்களாக மாற்றுகின்றனர். இது ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. எனவே அவர்கள் பைன் மரக்காய் அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் விரும்பி உற்சாகமாக வாங்கி செல்கின்றனர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி வருகிற 7 ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்திரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் சிவசுப்ரமணி, திருமலைசாமி, குணசேகரன், செந்தில்குமார், ஆலோசகர் ஹேமந்த்ராம் உட்பட பலர் கூறியதாவது:

    திருப்பூரில் முதன் முறையாக கட்டடங்களுக்கான எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் கட்டுமானப் பொருட்களுக்கான கண்காட்சி வரும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடக்கவுள்ளது.

    காலை 10 முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம். திருப்பூர் மேயர் தினேஷ்குமார், முன்னணி கட்டட கலை நிபுணர் பிரசன்னா பர்வதிகர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். தேசிய வர்த்தக வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம், 'ஆர்ம்ஸ்ட்ராங்' பழனிசாமி, 'சக்தி பிலிம்ஸ்' சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருள், கட்டட உள் மற்றும் வெளி அலங்கார பொருள் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமையவுள்ளது. ஸ்மார்ட் ஹோம், ஹோம் தியேட்டர், கிச்சன் வேர்ஸ், 'ஏசி', அலங்கார விளக்குகள், மார்பிள் மற்றும் டைல்ஸ், பசுமை தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள், அனைத்து அறைகளுக்கான அலங்கார பொருட்கள், மெத்தைகள் என அரங்குகள் பல வகையிலும் அமைகிறது.

    விரிவான பார்க்கிங், குழந்தைகள் விளையாட்டு பகுதி, குலுக்கல் அதிர்ஷ்டப்பரிசு ஆகியவற்றுடன், தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தாமரை மணி மாலைகள், ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி, கற்கண்டு மாலைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
    • நியூசிலாந்தில் நடக்கும் திருவிழாவுக்காக உல்லன் நூலில் இருந்து மாலைகள் தொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து நூலிழையில் ஆடைகள் உற்பத்தி செய்வது வாடிக்கை என்றாலும் உல்லன் நூலில் மாலைகள் தொடுத்து கொடுக்கும் ஆர்டர்களையும் திருப்பூர் பெற்றிருக்கிறது.திருப்பூர், அவிநாசி பகுதிகளில் இருந்து திருப்பதி, திருச்செந்தூர் கோவில்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மலர்மாலைகள், தாமரை மணி மாலைகள், ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி, கற்கண்டு மாலைகள் என விதவிதமான மாலைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    நியூசிலாந்தில் நடக்கும் திருவிழாவுக்காக உல்லன் நூலில் இருந்து மாலைகள் தொடுக்கும் பணி திருப்பூரில் மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மலர் நிலையம் நடத்தி வருபவர் சண்முகம். இவருக்கு மொத்த பூ வியாபாரி மூலமாக, நியூசிலாந்துக்கு மாலை தொடுத்து கொடுக்கும் ஆர்டர் கிடைத்துள்ளது.

    நியூசிலாந்தில் நடக்கும் திருவிழாவுக்காக உல்லன் மாலைகள் ஆர்டர் கிடைத்தது. அதற்காக 50 கிலோ உல்லன் நூல் வாங்கி வந்து, மாலைகள் தயாரித்து வருகிறோம். ஒருகிலோ உல்லன் நூல் 800க்கு கிடைக்கிறது. இரண்டு கிலோ நூலில் மூன்று அடி நீளமுள்ள ஒரு மாலை தயாரிக்க முடியும்.ஆண்டாள் மாலை போன்ற 16 மாலைகள் தொடுத்துள்ளோம். குறைந்தபட்சம் மூன்று அடி நீளத்தில் துவங்கி 12 அடி நீளம் வரையில் மாலைகள் தொடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பதால் கோவில் மற்றும் தேர் அலங்காரத்துக்காக இத்தகைய ஆர்டர் கொடுக்கி ன்றனர். மதுரையில் இருந்து விமானத்தில் அனுப்பி வைத்தோம் என்றார் பூ வியாபாரி சண்முகம்.

    வேலி கற்றாழை நார் வாயிலாக தயாரிக்கப்படும் அலங்காரப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் கிராம மற்றும் கதர் வாரிய தொழில் கூட்டமைப்பு வாயிலாக, குறு, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். கிரா கதர்வாரிய தொழில் கூட்டமைப்பு சார்பில், திருப்பூரில் மாநில அளவிலான கண்காட்சி நடந்து வருகிறது. இதில் மகளிர் குழுவினரால் செயல்படும் திருநெல்வேலி, சேரன்மாதேவி தாலுகாவை சேர்ந்த சுய தொழில் நிறுவனத்தினர் தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    வேலி கற்றாழையில் இருந்து பெறப்படும் நார் வாயிலாக விதம் விதமாக பொம்மை தயாரித்துள்ளனர். குளிப்பதற்கு உடலில் தேய்க்க பயன்படுத்தும் நார், கற்றாழையில் இருந்து தயாரிக்கின்றனர். அதில் வெட்டி வேரும் பயன்படுத்துகின்றனர்.அலங்கார விளக்கு கூம்பு, கீ செயின் உள்ளிட்ட பொருட்க ளையும் தயாரிக்கின்றனர். இவற்றுடன் வாழை நாரில் இருந்து விதம் விதமாக கூடைகளும் தயாரித்து சந்தைப்படுத்துகின்றனர்.

    விற்பனை நிறுவனத்தினர் கூறுகையில், கற்றாழை நார் வாயிலாக தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இத்தகைய பொருட்களுக்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். உள்ளூரிலும் சந்தைப்படுத்தி வருகிறோம் என்றனர். 

    ×