என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டம் திருவிழா தொடங்கியது"

    • குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள்ஊர்வலமாக அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு உள்ள சிவலிங்கத்துக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சருகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் புடைசூழ கோவில்பூசாரிகள் ஊர்வலமாக வந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    முன்னதாக இதில் கலந்து கொண்ட ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    ×