search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.400க்கு"

    • பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    • குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும். பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனைநடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    ×