என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கியாளர்கள்"

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை,

    கைத்தறித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன.

    2023-24-ம் நிதிஆண்டிற்கான கடன் இலக்கு ரூ.16 ஆயிரத்து 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயத்திற்கான கடன் இலக்கு ரூ.8814.95 கோடி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.5465.26 கோடி, பிற முன்னுரிமைகளுக்கான கடன் இலக்கு ரூ.1596.48 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடன்களை தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போது தான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

    விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறுதொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவி க்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம்,

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களு க்கான வேலை வாய்ப்பு உறுவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறை படுத்தும் திட்டம் ஆகிய சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இத்திட்ட ங்களின் மூலம் சிறப்பான சேவைகள் வழங்கிய சிறந்த வங்கிகள் மற்றும் சிறந்த வங்கிக்கிளைகளுக்கும் 2022-2023-ம் ஆண்டிற்கான விருது களையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    மேற்காணும் 4 திட்டங்கள் மூலமாக 326 நபர்களுக்குரூ.58.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் மருதப்பன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×