search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ்வி"

    • பீகாரில் நிதிஷ் குமார்- தேஜஷ்வி யாதவ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • பீகாரின் எதிர்காலம் தேஜஷ்வி யாதவ் தலைமையில் இருப்பதாக லாலு கூறியதாக மத்திய மந்திரி தெரிவித்திருந்தார்.

    பா.ஜனதாவை 2024 மக்களவை தேர்தலில் வீழ்த்தி சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    அப்போது மம்தா பானர்ஜி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை தேர்வு செய்வார்கள் என நிதிஷ் குமார் எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தயங்கியதாகவும், அதனால் கூட்டத்தின் பாதிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.

    இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியா கூட்டணி கரை சேருவது கடினம் எனவும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

    பீகாரில் நிதிஷ் குமார் லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், லாலு பிரசாத் பயணம் செய்த விமானத்தில் சென்றுள்ளார். அப்போது இருவரும் அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.

    பின்னர் விமான பயணத்தின்போது லாலு பிரசாத் யாதவ் தன்னிடம் "தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் பீகாரின் எதிர்காலம் இருக்கிறது" என நம்புவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டிருந்தார்.

    ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கு இந்த கருத்து மேலும் அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகனும், துணை முதல்வருமான தேஜஷ்வி யாதவ் "மத்திய அமைச்சர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. தனது தந்தை அவ்வாறு கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கிரிராஜ் சிங் தனது தந்தையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மட்டன் விருந்து வைக்க விரும்புவதாக தெரிவித்தார்" என்றார்.

    ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ஜனதாவின் தேர்தல் திட்டத்தின்படி, கிரிராஜ் தனது எதிர்கால அரசியல் குறித்து கவலை தெரிவித்ததாக தேஜஷ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
    • டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் நிறுவனருமான லாலுபிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.

    அப்போது ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகிறது. இதைதொடர்ந்து லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் கடந்த 15-ந்தேதி ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில் ரெயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லல்லுபிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்றார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது "நாங் கள் எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கிறோம். ஆனால் தற்போது நாட்டின் நிலைமை என்னவென்றால் போராடுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதைத் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஏற்கனவே 3 முறை சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்தார்.

    இதற்கிடையே இதே வழக்கில் லல்லுவின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை தொடர்ந்து மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அவரி டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியிடம் சி.பி.ஐ.யும், மகள் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறையும் டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது. டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×