என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தெண்டுல்கர்"
- 34 வயதான வீராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார்.
- 500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீராட்கோலியை கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி அபாரமாக விளையாடி செஞ்சுரி அடித்தார்.
அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் செஞ்சூரி அடித்தார்.
34 வயதான வீராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனை சமன் செய்தார்.
பிராட்மேன் 52 டெஸ்டில் 29 செஞ்சுரி அடித்து இருந்தார். டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் வீராட்கோலி, பிராட்மேனுடன் இணைந்து 16-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச போட்டிகளில் வீராட்கோலி 76-வது சதத்தை தொட்டார். அவர் டெஸ்டில் 29 சதமும், ஒருநாள் போட்டியில் 46 செஞ்சுரியும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் ஆக 76 சதத்தை எடுத்து உள்ளார்.தெண்டுல்கர் 100 சதத்துடன் (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இருக்கும் வீராட் கோலி அவரை தொடுவதற்கு இன்னும் 24 செஞ்சூரிகள் தேவை.
500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீராட்கோலியை கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கூறும்போது, "மற்றொரு நாள், மற்றொரு சதத்தை வீராட்கோலி எடுத்துள்ளார். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது" என்றார்.
- தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.
- வீராட்கோலி சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார்.
அவர் கிட்டத்தட்ட 3½ ஆண்டுகளுக்கு பிறகு செஞ்சுரி அடித்தார். வீராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 + ஒருநாள் போட்டி 46 + 20 ஓவர் 1) அடித்துள்ளார்.
தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை வீராட்கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது பெரிய விஷயம்.
வீராட்கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்