என் மலர்
நீங்கள் தேடியது "சிவலிங்கம் மீட்பு"
- சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்தது
- பொதுமக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பணியாளர்கள் சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டும் போது வேப்பமரத்தடியில் இருந்த மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் அந்த சிவலிங்கம் பிரம்ம சூத்திர குறியீடுடன் காணப்பட்டது இந்த வகை சிவலிங்கம் மிகவும் பழமையானதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவலிங்கத்திற்கு வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை செய்து வழிபட்டனர்.
சிவலிங்கத்திற்கு கிராம மக்கள் கோவில் கட்டப் போவதாக தெரிவித்தனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அப்பகுதி மக்கள் பார்த்து வழிபட்டுச் சென்றனர்.