என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதிநீக்கம்"

    • எம்.பி. என்ற முறையில் அவருக்கு துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது.
    • ஒரு மாத காலத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து எம்.பி. என்ற முறையில் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும்.

    இந்நிலையில், அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், பதவியை இழந்ததில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பங்களாவில் தங்குவதற்கான அனுமதியை நீட்டிக்கும்படி வீட்டுவசதிக் குழுவிற்கு ராகுல் காந்தி கடிதம் எழுதலாம். அந்தக் கோரிக்கையை குழு பரிசீலித்து தனது முடிவை அறிவிக்கும் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

    • மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
    • பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுவது கடுமையானது என்றும், ஆறு ஆண்டுகள் தடை போதுமானது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், தகுதி நீக்க காலத்தை முடிவு செய்வது முற்றிலும் பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1) இன் கீழ், அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலம் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

     

    ×