என் மலர்
நீங்கள் தேடியது "பிரேத பரிசோதனை Old man died"
- கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார்.
- இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது.
கடலூர்:
காட்டுமன்னா ர்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் வெள்ளாலர் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். ஜவுளிக்கடையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் பிஸ்கட் கேட்டனர். இதனை வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றார்.
அப்போது வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார். இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் இத்தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோவிந்தராஜின் உடலை மீட்டு போலீசாரிடம் ஓப்படைத்தனர் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.