என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீனிவாசன்"

    • புதிதாக அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிசாந்த், மண்டால், ரஷித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
    • ஜெர்சி வழங்கும் புகைப்படம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீனிவாசன்- டோனி தலைமையில் புதிய சிங்கங்களுக்கு சிஎஸ்கே ஜெர்சிஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதவுள்ளது. 

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு அவர்களுக்கான ஜெர்சி வழங்கப்பட்டது. இதனை அணி நிர்வாகம் சார்பில் ஸ்ரீனிவாசன், டோனி, ஸ்டீவன் பிளெமிங், காசி விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர். ஜெர்சி வழங்கும் புகைப்படம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.


    அதில் புதிதாக அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிசாந்த், மண்டால், ரஷித் ஆகியோர் அவர்களுக்கான ஜெர்சியை பெற்று கொண்டனர்.

    • விற்கப்பட்ட பங்குகளில் ஸ்ரீனிவாசனின் பங்கு மட்டுமே ரூ.2,656 கோடி மதிப்புடையது ஆகும்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்.

    தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்தவருமான நாராயணசாமி ஸ்ரீனிவாசன் தனது நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்றார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.390 என்ற விலை கொடுத்து மொத்தமாக ரூ.3,954 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை அல்ட்ரா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளதால், நிர்வாகம் கைமாற உள்ளது.

     

    இந்நிலையில் தனது சிஇஓ பதவியிலிருந்து விலகும் ஸ்ரீனிவாசன் நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் உணர்ச்சி பொங்க விடைபெற்றுள்ளார். மேலும் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், 'நிர்வாகம் வேறு கைகளுக்கு மாறுவதால் ஊழியர்கள் யாரும் தயங்கத் தேவையில்லை. இப்போது நம் நிறுவனத்தில் இருக்கும் பாலிசிகளும், நடைமுறைகளும் எந்த விதத்திலும் மாற்றப்படாது என்ற உறுதியை அல்ட்ரா டெக் நிறுவனத்திடம் பெற்றுள்ளேன்' என்று தெரிவித்தார்.

    இந்தியா சிமெண்ட்ஸ்  நிறுவனமானது (ICL) கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யர் மற்றும் டி.எஸ் நாராயண ஸ்வாமி ஆகியோரால் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தந்தை நாராயண ஸ்வாமியின் மறைவுக்குப் பின் தனது 23 வது வயதிலேயே ஸ்ரீனிவாசன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்ட்டராக பொறுப்பேற்றார்.

    அவரது தலைமையில் இந்தியா சிமெண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நாள்வரை அந்த தலைமைப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாசன் தலைமையிலானஇந்தியா சிமெண்ட்ஸ் போட்டி அதிகரித்ததாலும், விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் நிறுவனம் நொடித்துள்ளது. இதனாலேயே ஸ்ரீனிவாசன் பங்குகளை விற்கும் முடிவை எடுத்துள்ளார்.

     

    ஸ்ரீனிவாசனின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியதாகும். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் [ஐ.சி.சி] தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான் பி.சி.சி.ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார். தற்போது ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சிஎஸ்கேவை நிர்வகிக்கக்போகும் நிறுவனம் எது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

     

    • ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
    • அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.

    பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லலித் மோடி, ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறின. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அதை செய்தோம். அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். ஸ்ரீனிவாசனுக்கு பிளின்டாஃப் வேண்டும் என்பதால், நாங்கள் மற்றவர்களிடம் அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்."

    "அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார்," என்று தெரிவித்தார். 

    • இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்.

    கடந்த ஜூலை மாதம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியது.

    ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு ரூ.390 என்ற விலை கொடுத்து மொத்தமாக ரூ.3,954 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை அல்ட்ரா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்திருந்தது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது.

    டிசம்பர் 24 அன்று இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்டின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.

    அதனால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் பதவி விலகியுள்ளார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமானது (ICL) கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யர் மற்றும் டி.எஸ் நாராயண ஸ்வாமி ஆகியோரால் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தந்தை நாராயண ஸ்வாமியின் மறைவுக்குப் பின் தனது 23 வது வயதிலேயே ஸ்ரீனிவாசன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்ட்டராக பொறுப்பேற்றார்.

    அவரது தலைமையில் இந்தியா சிமெண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நாள்வரை அந்த தலைமைப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாசன் தலைமையிலான இந்தியா சிமெண்ட்ஸ் போட்டி அதிகரித்ததாலும், விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் நிறுவனத்தின் பங்குகளை ஸ்ரீனிவாசன் விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீனிவாசனின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியதாகும். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் [ஐ.சி.சி] தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான் பி.சி.சி.ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

    தற்போது ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் 30 சதவீத பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் ஷேர்ஹோல்டர்ஸ் டிரஸ்ட், அதே பெயரில் வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×