search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி உபகரணங்கள்"

    • கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதிய சுகாதார வளாகம் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது .
    • மேலும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை குண்டுபட்டியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பல்வேறு உபகரணங்கள் மற்றும் சுகாதார வளாகம் தேவையாக இருந்தது. இதன் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதிய சுகாதார வளாகம் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது .

    விழாவிற்கு செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவருமான குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசை ஜான் வரவேற்றார். பெண்களுக்கான சுகாதார வளாகத்தை கல்வி அலுவலர் குகப்பிரியா, மாணவர்களுக்கான சுகாதார வளாகத்தை முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் கிருபா ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே.என்.பி.புரம் நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்பாலசுந்தரி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.

    திருப்பூர் வடக்கு,தெற்கு, பொங்கலூர், பல்லடம், அவினாசி, காங்கேயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மாற்றுதிறன் மாணவ ர்களுக்கு உபகர ணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வை யாளர்கள், ஒருங்கிணை ப்பாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்று னர்கள் செய்திருந்தனர்.  

    ×