search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில் கொரோனா"

    • பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
    • மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. பாதிப்பை காட்டிலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 890 ஆக உள்ளது.

    இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத் துறையினர் அறிவுறு த்தியுள்ளனர்.

    மேலும் தற்போது கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வர இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். எனவே இது போன்ற விசேஷங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    • 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    • 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 944 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டத்தில் 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறிது சிறிதாக கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×