search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் தண்ணீர் திறப்பு"

    • குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து போர்வே டேம் வரை சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு தேக்கப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மின் உற்பத்திக்கு பின்னர் இரைச்சல் பாலம் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் லோயர்கேம்ப் ஆற்றில் ஒன்று சேர்கிறது.

    இதில் குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நீர்வளத்துறை திட்ட உருவாக்க முதன்மை பொறியாளர் பொன்ராஜ், மதுரை மண்டல முதன்மை பொறியாளர் ஞானசேகர், சென்னை நீர்வளத்துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை பொறியாளர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    இதற்காக நேற்று காலை முதல் மாலை வரை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது தமிழக பகுதிக்கு இரைச்சல் பாலம் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை சேதம் அடைந்தது. எனவே தற்போது எந்தவித இடையூறுமின்றி கூடுதல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 414 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.44 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.71 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 791 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது.
    • கீழ்பவானி பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிபள்ளம் அணை பகுதியில் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. இதன் காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியை எட்டியது.

    இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.92 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.95 அடியாக உள்ளது.

    ×