search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் ஆலை முன்பு"

    • ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது.
    • காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள் முதல் விலை உயர்த்தப் படவில்லை. ஆனால் புண்ணாக்கு, தவிடு, தீவனங்களின் விலை மற்றும் ஆள் கூலி கடுமையாக உயர்ந்துள்ளன.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. ஐரோப்பி யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுக்கான உற்பத்தி செலவை அரசே மானிய மாக வழங்குகிறது.

    இவ்வாறான கட்டமைப்பு இங்கு இல்லாததால் விவசா யிகளும், ஆவின் நிறுவ னமும் நலிந்து வருகிறோம்.

    எனவே பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நலிந்து வரும் ஆவின் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்க செயலர்களை பணிவரன் முறை செய்து உரிய சம்பளம், பணி பாது காப்பு வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி காலை 10 மணி முதல் சித்தோடு ஆவின் ஆலை அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

    ×