search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர்மன்றத்தலைவர்"

    • காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சியில் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி, முகமதுஷாபுரம் தொடக்கப்பள்ளி, வேங்கட சமுத்திரம் தொடக்கப் பள்ளி, தெற்குதெரு பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி மற்றும் முஸ்லீம் பெண்கள் பள்ளி ஆகிய 6 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 209 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப்பொருளாளர் சின்னச்சாமி, கவுன்சிலா்கள் திருக்குமார், ரம்ஜான் பேகம் ஜாகீர் உசேன், அமுதா சரவணன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ் பேசுகையில் "காங்கயம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கயம் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது. இதற்காக காங்கயம் அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நகராட்சி சார்பில் மாட்டு சந்தை செயல்படுத்தப்படும்.

    காங்கயம் நகராட்சியில் 2022-2023 ஆண்டுக்குரிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி ஆகிய அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் வசூல் செய்து, தமிழ்நாட்டில் முதல் நிலை நகராட்சியாக காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது.வரி வசூல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நகராட்சி ஊழியர்கள் மற்றும் காங்கயம் நகரப்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.கூட்டத்தில் குடிநீர்குழாய் பழுது நீக்குதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×