search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்கேஜி"

    • பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
    • பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.

    சென்னை:

    புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் நாட்டில் பன்மொழி கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக் கையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி. எஸ்.இ.) தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை இந்திய மொழிகளில் கல்வியை வழங்க முடிவு செய்துள்ளது.

    தற்போது பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கிலமும் ஒரு சில பள்ளிகளில் இந்தியிலும் கற்பித்தல் பணி நடக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020-யானது பள்ளிகளில் தொடங்கி உயர்கல்வி வரை முழுவதும் வீட்டு மொழி, தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்றுவிக்கும் முறையை கொண்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட் டத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு திட்டமி டப்பட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க மத்திய கல்வி மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.

    பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டு இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும் இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் புதிய பள்ளி பாடத்திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மொழியியல் பன்முகத்தன்மை, கலாச்சார புரிதல் மற்றும் மாணவர்கள் இடையே கல்வியை வளர்ப்பதற்கான மதிப்புமிக்க அணுகுமுறையாக பன்மொழி கல்வி பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது.

    சி.பி.எஸ்.இ.யுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளை பயன்படுத்த பரிசீலிக்கலாம். இது மாணவர்களுக்கு பன்மொழியில் அறிவாற்றலை வளர்க்கும் நன்மைகளை வலியுறுத்துகிறது. குறிப்பாக அவர்கள் பல மொழிகளில் வெளியாகும்போது அடிப்படை நிலையில் இருந்து அவர்களின் தாய் மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த முடிகிறது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    22 அட்டவணைப் படுத்தப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.

    இது குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்கு விப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது நாட்டில் 28,886 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
    • கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை:

    இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கியது. பெற்றோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஏப்ரல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    தகுதியான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினால் குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆதார், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகிய 8 ஆவணங்கள் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    1-8-2019 முதல் 31-7-2020 வரை பிறந்த குழந்தைகள் இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு பிரைமரி நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் கூறுகையில், 'தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கட்டணத்தை மட்டும் அரசு செலுத்தும்.

    புத்தகம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் பெற்றோர் செலுத்த வேண்டும். தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சமீபத்தில் கொடுத்துள்ளது. நிலுவை தொகையை படிப்படியாக கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என்றார்.

    கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

    ஒரே பள்ளியில் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    ×