என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாங்கி"
- கைதான கொள்ளையன் வாக்குமூலம்
- 7 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மூவாற்றுமுகத்தில் பள்ளிக் கூடத்துக்கு குழந்தைகளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுனிதா என்பவர் கழுத்திலிருந்து 7 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பறித்து சென்றனர்.
இது தொடர்பாக சுசீந்திரம் வழுக்கம்பாறை மணவிளையைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 20), குளச்சல் உடையார் விளை நாடாச்சிவிளை நிதீஷ் ராஜா (22), குளச்சல் செம்பொன்விளை ஓலக்கோடு பிரேம்தாஸ் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதன் பின் எனக்கு படிப்பில் பெரிய ஆர்வம் ஏதும் இல்லாததால் கூலி வேலை செய்து வந்தேன். அதில் போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்று பிழைப்பு நடத்தி வந்தேன். தொடர்ந்து கஞ்சா விற்கும் தொழில் செய்து வந்ததால் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திலும் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திலும் கஞ்சா வழக்கும், கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்குப் பதிவும் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி கொலை வழக்கில் தற்போது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையொப்பம் செய்து வருகிறேன். தற்போது இந்த கொலை வழக்கு சம்மந்தமாக பணக்கஷ்டம் ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நான் பொம்மை வியாபாரம் செய்து வந்தேன்.
அப்போது குளச்சல் உடையார் விளை நாடாச்சிவிளையை சேர்ந்த நிதிஷ் ராஜா என்பவரும் அவரது பக்கத்து ஊரைச்சேர்ந்த குளச்சல் செம்பென்விளை ஓலக்கோடு பிரேம்தாஸ் ஆகிய இருவரும் ஐஸ் வியாபாரம் செய்து வந்ததில் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களை விசாரிக்க நிதீஷ் ராஜாவுக்கும் 2021-ம் ஆண்டு குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், அதே ஆண்டு கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் பதிவாகி தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதும் தெரிந்தேன். அதுபோல் பிரேம்தாஸுக்கும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் 2021ம் ஆண்டு ஒரு கஞ்சா வழக்கும் பதிவாகி அதுவும் விசாரணையில் இருப்பதாக தெரிந்தேன். எங்கள் மூன்று பேருக்கும் பல வழக்குகள் இருந்ததால் வழக்கு செலவுக்கும் எங்கள் செலவுக்கும் போதிய வருமானம் இல்லாததாலும் மண்டைக்காடு கோவில் கொடை விழாவில் போதிய வருமானம் ஏதும் கிடைக்காததால் கொடை முடிந்து நாங்கள் மூவருமாக ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு எங்காவது திருடி பிழைக்கலாம் என்று எண்ணி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தோம். சம்பவத்தன்று நிதிஷ் ராஜா வீட்டிற்கு சென்றேன்.
அப்போது நிதீஷ் ராஜாவின் வீட்டில் பதிவெண் இல்லாத ஹீரோ மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்ததை கண்டு, இது யார் வண்டி என நிதீஷ்ராஜாவிடம் கேட்ட போது நிதீஷ்ராஜா எங்களிடம் எனக்கு சொந்தமான வண்டிதான் எனவும் மேற்படி வண்டியை நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்க்கு குளச்சலில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.48 ஆயிரம் ரொக்கம் கொடுத்து வாங்கியதாகவும் தற்போது ஒரு மாதகாலமாக வண்டி பைனான்ஸ் கட்டவும் பணமில்லை. இதுவரை பதிவும் செய்யவில்லை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி திருட்டு அல்லது வழிப்பறி செய்து பணம் சம்பாதித்து நிதீஷ்ராஜாவின் பைனான்ஸ் கடனையும் தீர்த்து ஜாலியாக சுற்றுவதற்கு ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள்களையும் வாங்கி உல்லாசமாக சுற்றலாம் என்று திட்டம்போட்டோம். உடனே அங்கிருந்து புறப்பட்டு திற்பரப்பு ஏரியாவில் சென்று அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஏதாவது வழிப்பறி நடத்தலாம் என திட்டம் போட்டோம். எங்கள் முக அடையாளங்கள் தெரியாமல் இருக்கவேண்டி எங்களது முகங்களில் மாஸ்க் அணித்து கொண்டோம். மூவாற்றுமுகம் வழியாக திற்பரப்பு நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மூவாற்றுமுகம் ஆற்றுப் பாலத்தின் சற்று முன்பாக வைத்து எங்களுக்கு எதிரே அதே ரோட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க தாலிச் செயினை பறித்து விட்டு நிதிஷ்ராஜாவின் வீட்டிற்கு சென்றுவிட்டோம். அங்கு சென்று நாங்கள் திருடி எடுத்த தங்க தாலிச் செயினின் எடை சுமார் 6 ¼ பவுன் இருந்தது. இவ்வளவு தங்க நகையால் நாங்கள் ஆசைப்பட்டபடி எதுவும் வாங்க முடியாது என்று கருதி மீண்டும் ஏதாவது வழிப்பறி செய்யலாம் என முடிவு செய்தோம். திருடிய தங்கசெயினை எனது கைவசம் வைத்து விட்டு மீண்டும் ஏதாவது திருடவோ வழிப்பறியோ செய்யலாம் எனகருதி நாங்கள் மூன்று பேருமாக அதே மோட்டார்சைக்கிளில் மாத்தூர் தொட்டிப்பாலம் வந்து மோட்டார் சைக்கிளை வாகனம் நிறுத்தும் இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி னோம். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். கொள்ளையர் களை 20 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்