search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு"

    • 20-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் பகுதியில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகளை விரைந்து முடிக்கவும் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெருவிளக்குகள் போன்ற பணிகளையும், கட்டுமான பணிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அனைத்து பணிகளையும் வருகிற 20-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, செயற்பொறியாளர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×